Sunday, November 24, 2013

இறைவனது அத்தாட்சிகள்

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
நீங்கள், நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பின், நிச்சயமாக அதில் உங்களுக்கு, அத்தாட்சி இருக்கின்றது. அல்குர்ஆன் (2-248)

إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُولِي الْأَبْصَارِ
நிச்சயமாக அதில் பார்வை உடையோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அல்குர்ஆன் (3-13)

إِنَّ فِي ذَٰلِكُمْ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ளும் கூட்டத்தாருக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் (6-99)

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டோருக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சி இருக்கின்றது. அல்குர்ஆன் (15-77)

இறைவனது வல்லமையை எடுத்துக்காட்டும் பல அத்தாட்சிகள் நமது கண்களுக்குப் புலப்படும் வண்ணம் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அல்லாஹ் அவனது இறைத்தூதர்களின் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்திய பல அற்புதமான அத்தாட்சிகள் முதல் இன்று வரை பற்பல நிகழ்வுகள், படைப்புகள் மனிதர்களின் அறிவுக்கும், கண்களுக்கும் வெளியாகிக் கொண்டுள்ளன.

அவ்வாறு அல்லாஹ் தனது அத்தாட்சிகளை வெளிப்படுத்துவதன் அடிப்படையான நோக்கம், அவனது வல்லமையை மனிதர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அத்தாட்சிகள் எவ்வாறு நிதர்சனமான உண்மையாக இருக்கின்றனவோ, அவ்வாறே, அல்லாஹ் அவனது வேதங்களில் கூறிய வாக்குறுதிகளும், இம்மை, மறுமை பற்றிய மனித அறிவுக்குப் புலப்படாத விஷயங்களும் உண்மையானவை என்று மனிதர்கள் நம்பிக்கை கொண்டு, அவனது கட்டளைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான், இத்தகைய அத்தாட்சிகள் வெளிப்படுத்தப்படுவதன் நோக்கம் ஆகும்.

இத்தகைய ஓர் அரிய அத்தாட்சி ஒன்று சென்னையில், அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கஃப்பார் என்னும் சகோதரர் தான் கடைத்தெருவில் இருந்து வாங்கிய பப்பாளிப்பழம் ஒன்றில் கண்டார். அதன் ஒரு பகுதியில், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்னும் வார்த்தைகளுக்கான அரபி எழுத்துக்கள் வெளியாகி இருப்பதைக் கண்டார். தான் நேரில் கண்ட அவ்வற்புதத்தைத் தன் பகுதி மஸ்ஜித் இமாமாகிய மௌலவி பஷீர் அவர்களிடமும், இன்னும் பல மார்க்க அறிஞர்களிடமும் நேரில் காண்பித்து உறுதி செய்து கொண்டார்.

அரபி மொழி தெரிந்தவர்கள், இப்பழத்தை நேரடியாகப் பார்க்கும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கான அரபி வார்த்தைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.. மௌலவி பஷீர் அவர்களுடன் வந்து எம்மிடமும் சகோதரர் அப்துல் கஃப்பார் அவர்கள் அந்த அற்புதப் பழத்தைக் காட்டினார்.


அந்தப் பழத்தை நீங்களும் இங்கே பார்க்கலாம்...




அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவன் தனது அடியார்களுக்கு வெளிப்படுத்துவது அவன் மீதும், அவனது வார்த்தைகளின் மீதும் கொண்டுள்ள நம்பிகையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், படைப்புகளின் மீது நம்பிக்கை வைப்பதை விட அவற்றைப் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் மீது பரிசுத்தமான நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.









அல்லாஹ் அவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக்கி அவனது கட்டளைகைளை நிறைவேற்ற அருள்புரிவானாக. ஆமீன்.


1 comment:

  1. It is not only bismilla some more words written in that pappya but we couldnt read out mashaallah it is really miracle

    ReplyDelete