இஸ்லாமியப் பொருளாதாரம் (2)
சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வழிகள்
அஃப்ளலுல் உலமா
அ. அஹ்மது ஆரிஃப், எம். காம்., எம். ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600087
அ. அஹ்மது ஆரிஃப், எம். காம்., எம். ஃபில்.,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600087
விசுவாசிகளே, நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். அவ்வாறே, அல்லாஹ்வுடைய தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் வழிப்பட்டு நடங்கள். நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்படின், அதனை அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் நன்மையாகவும், மிக அழகான முடிவாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 5-59)
மனிதகுலத்தின் எல்லா வகையான குழப்பங்களுக்கும் தீர்வு காணும் வழியை மேற்கண்ட வசனம் நன்கு தெளிவு படுத்துகின்றது. பிணக்கு ஏற்படின், அதனை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்பதன் பொருள், அல்லாஹ் அருளிய குர்ஆன் மற்றும் அவன் தூதரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிக்கல்களுக்கு தீர்வு காணுங்கள் என்பதாகும்.
தெளிவாகச் சொல்வதென்றால், எந்த விஷயத்திலும், முடிவு செய்வதற்குக் கீழ்க்கண்ட அடிப்படைகள் கையாளப் பெற வேண்டும்.
1. அல்லாஹ் அருளிய குர்ஆன்
2. ஹதீது, சுன்னத்து
3. இஜ்மாஉ (இறைநம்பிக்கையாளர்களின் ஏகோபித்த முடிவு)
4. கியாஸு (ஏற்கனவே எடுக்கப்பட்ட உதாரணங்களின் அடிப்படைகளைப் பின்பற்றுதல்), இஜ்திஹாது (மேற்கண்டவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்தல்)
1. குர்ஆன்
மக்களுக்கு வழிகாட்டுவதற்கென் அல்லாஹ்வால் அருளப்பெற்ற இறுதி வேதம் குர்ஆன். இது கூறும் முறைகள் குழப்பங்களைத் தீர்ப்பதில் பின்பற்றப் பட வேண்டும்.
குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறுவதாவது,
இது வேதநூல், இதில் சந்தேகமே இல்லை. பயபக்தி உடையோருக்கு (இது) நேரான வழியைக் காட்டுகிறது (அல்பகரா-2)
இது வேதநூல், இதில் சந்தேகமே இல்லை. பயபக்தி உடையோருக்கு (இது) நேரான வழியைக் காட்டுகிறது (அல்பகரா-2)
நபியே, அல்லாஹ் உமக்கு அளித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக் கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது அருளியுள்ளோம். (அந்நிஸா – 2)
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து, பேரொளியும், தெளிவும் உள்ள ஒரு வேதம் உங்களிடம் வந்திருக்கின்றது.அதன் மூலம் அல்லாஹ், உங்களில் எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின் பற்றுகிறார்களோ, அவர்களைச் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி (அறியாமை) இருள்களில் இருந்தும் அவர்களை வெளிப்படுத்தித் தன் அருளைக் கொண்டும் பிரகாசத்தின் பக்கம் கொண்டு சென்று விடுகின்றார்ன. மேலும், அவர்களை நேரான வழியிலும் செல்லும்படிச் செய்கின்றான். (அல்மாஇதா-15, 16)
நிச்சயமாக, இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. அன்றி, விசுவாசங் கொண்டு நற்கருமங்கச் செய்வோருக்கு,நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகின்றது. (பனீ இஸ்ராஈல்-9)
குர்ஆனின் அடிப்படையில் தீர்வு காணாதவர்களைப் பற்றிக் கூறும் போது அல்லாஹ், எவர்கள் அல்லாஹ் அருளியற்றைக் கொண்டு தீர்ப்பளிக் கவில்லையோ, அவர்கள் தான் நிராகரிப்பவர்கள் (அல்மாஇதா – 44)
எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவிலலையோ, அவர்கள் தான் அக்கிரமக்காரர்கள். (அல்மாஇதா – 45)
எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவிலலையோ, அவர்கள் தான் அக்கிரமக்காரர்கள். (அல்மாஇதா – 47)
என்று பழித்துக் கூறுகின்றான்.
2. ஹதீதும், சுன்னத்தும்
தீர்வு காண்பதற்கு இஸ்லாம் தரும் இரண்டாம் அடிப்படை இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல் மற்றும் அவர்கள் பிறரது செயல்களுக்கு அளித்த ஒப்புதல்கள் ஆகியவை ஆகும். இதில் நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களான தாபிஈன்களின் சொல்,செயல், அவர்கள் பிறரது செயல்களுக்கு அளித்த ஒப்புதல்களும் அடங்கும்.
இந்த இரண்டாம் அடிப்படையின் முக்கியத்துவம் பின்வரும் இறை வசனங்களில் இருந்து விளங்குகின்றது.
எவர் இறைத்தூதருக்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டேவர் ஆவார் (அந்நிஸா-2/20)
நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பின், என்னைப் பின்பற்றுங்கள். (அவ்வாறு செய்யின்) அல்லாஹ் உங்கள் மீது அன்பு கொண்டு உங்கள் பாவங்களை மன்னித்து அருள்வான், என நபியே, நீர் கூறும். (ஆலு இம்ரான்-31)
நிச்சயமாக, உங்களின் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கு, இறைத்தூதரில் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்-அஹ்ஸாப்-21)
அவரது வழியை விட்டும் பிறழ்ந்து போவோர், தங்களைக் குழப்பமோ, கடுமையான வேதனையோ பிடிப்பதைப் பயந்து கொள்ளட்டும். (அந்நூர் -63)
நபியே, நீர் அல்லாஹ்வின் பாதையாகிய நேரான பாதையின் பக்கம் வழிகாட்டுகிறீர் (அஷ்ஷுஅரா-52,53)
மேலும், இறைத்தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை உங்களை விட்டும் தடுத்தாரோ, அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள், (அல் ஹஷ்ரு-7)
3. இஜ்மாஉ
இஜ்மாஉ என்பதற்கு இறைநம்பிக்கையாளர்களின் ஒருமனதான முடிவு என்று பொருள். இது இஸ்லாம் பிரச்சினைகளைத் தீர்க்கக் காட்டும் மூன்றாம் வழியாகும்.
(விசுவாசிகளே), அவ்வாறே நடுநிலையான சமுதாயத்தினராகவும் உங்களை நாம் ஆக்கினோம். ஆகவே, நீங்கள், மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருங்கள். நம்முடைய தூதர் உங்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பார். (அல்பகரா-143)
நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன்பின்னரும் எவன் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து விசுவாசிகளின் வழியல்லாத ஒன்றில் செல்லுகிறானோ, அவனை நாம் அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு அவனை நரகத்தில் சேர்ந்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது. (அந்நிஸாஉ-115)
மேற்கண்ட வசனத்தில் விசுவாசிகளின் வழி என்பது இஜ்மாஉவையே குறிக்கும் என்பது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.
எனது உம்மத்தினர் (முஸ்லிம்கள்) ஒருபோதும் தவறான ஒரு விஷயத்தில் ஒன்றுபட மாட்டார்கள், என்று நபிமொழி ஒன்று கூறுகின்றது. அதன் கருத்து, முஃமின்கள் எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளும் முடிவு நன்மையானகவே இருக்கும் என்பதாகும்.
4. கியாஸும், இஜ்திஹாதும்
இவை இரண்டும் நான்காம் அடிப்படையாகும். கியாஸு என்பது இஸ்லாமியச் சட்டத்தில் ஒரு விஷயத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தீர்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு வேறொரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதாகும்.
இஜ்திஹாது என்பது, ஒரு விஷயத்தில் மேற்கண்ட, எந்த முறைகளிலும் தீர்வு காண இயலாவிடின், இஸ்லாமியச் சட்டத்திற்கு முரண்படாத வகையில் தனது அறிவைப் பயன்படுத்தித் தீர்வு காண்பதாகும்.
இந்த நான்காம் அடிப்படையைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்று இருப்பது இன்றியமையாததாகும்.
இஸ்லாமியப் பொருளியல், மனிதனுக்கு ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களை நீக்தித் தீர்வு காண்பதற்கு மேற்கண்ட நான்கு அடிப்படைகளே ஆதாரமாக உள்ளன. அந்நான்கின் அடிப்படையில் தீர்வு காணும் போது மட்டுமே, தீர்வின் முழுமையான நன்மை கிட்டக் கூடியதாக இருக்கின்றது.
அதிலிருந்து விலகிச் சென்று தீர்வு காண முயல்பவர்களை நோக்கித் திருக்குர்ஆன், அல்லாஹ்வுடைய நேரான வழியை அன்றித் தன் மனோ இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டா? (அல்கஸஸ்-56) என இழித்துக் கூறிக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment