Friday, August 9, 2013

ஈதுப் பெருநாள் சிந்தனை - படித்தரங்களின் படித்தரங்கள்

படித்தரங்களின் படித்தரங்கள்

தீனின் அடிப்படை நோக்கம்
1.அல்லாஹ்வை அறிதல் / இல்மு
2. அல்லாஹ்வை நெருங்குதல் அல்லது அடைதல் / அமல்

இரண்டும் சேர்ந்தது இபாதத் ஆகும்.


இல்மு - அமல்களின் 
மூலம் அல்லாஹ்வை அறிவதிலும், 
அவனை அடைவதிலும் உள்ள படித்தரங்கள்

1. ரிஸாலத்
தூதர்களுக்கு அருளப்பட்ட படித்தரங்கள்
2. நுபுவ்வத்
நபிமார்களுக்கும அருளப்பட்ட படித்தரங்கள்
3. ஸுஹ்பத்
தூதர்கள், நபிமார்கள் ஆகியோரின் தோழர்களுக்கு அருளப்பட்ட படித்தரங்கள்
4. விலாயத்
மேற்கண்ட மூன்று படித்தரங்களுக்கு அடுத்து உள்ளவர்களுக்கு அருளப்படும் படித்தரங்கள்
5. ஸலாஹிய்யத்
விலாயத் எனும் இறைநேசத்தின் படித்தரங்களை பெறுவதற்கான
அடிப்படைத் தகுதியை நிர்ணயிக்கும் படித்தரங்கள்


படித்தரங்களை அடைய உதவும் காரணங்கள்
1. அல்லாஹ்வுக்கு வழிப்படுதல்
2. அல்லாஹ்வின் தூதருக்கு வழிப்படுதல்

காரணங்களைச் செயல்படுத்தும் முறைகள்
1. அல்லாஹ் அவன் தூதர் சொல்லியவற்றை நம்புதல்
2. அவர்கள் ஏவியவற்றை எடுத்து நடத்தல்
3. அவர்கள் தடுத்தவற்றைத் தவிர்ந்து கொள்ளல்
4. அனுமதிக்கப்பட்டவைகளையும் அதிகப்படியாகப் பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளல்.
5. சந்தேகமானவற்றில் இருந்தும் தவிர்ந்து கொள்ளுதல்
6. இதில் உண்டாகும் சிரமங்களின் மீது பொறுமையைக் கடைப் பிடித்தல்

இம்முறைகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் இம்மைப் பயன்கள்
1. அல்லாஹ்வின் நெருக்கம்
2. அல்லாஹ்வின் பொருத்தம்
3. அல்லாஹ்வின் நெருக்கம், பொருத்தத்தின் மூலம் மன நிம்மதி
4. அவனை அறியும் இன்பம்
5. அவனை வழிப்படுவதில் இன்னும் அதிகம் வாய்ப்பு அருளப்படுதல்.
6. போதுமென்ற திருப்தி
7. பிரச்சினைகளில் தீர்வு
8. நேர்வழி
9. இன்னும் எண்ணற்ற நன்மைகள்
10. அல்லாஹ் பொருந்திக் கொண்ட நிலையில் இம்மையை விட்டு மறுமைக்குச் செல்லல்


இம்முறைகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் மறுமைப் பயன்கள்
1.சுவனத்தில் நுழைதல், அதில் உள்ள இன்பங்களை அடைதல்
2..அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுதல்
3. அவனது ஸலாமையும், கலாமையும் கேட்கும் பேறு பெறுதல்
3. அவனது அருளை பொருத்தத்தை அடைதல்
4. அவனது திருக்காட்சியைப் பெறுதல்

அனைவருக்கும் ஈதுப் பெருநாள் வாழ்த்துக்கள்,
அன்புடன்,,,
அஹ்மது ஆரிஃப்





2 comments: