Monday, August 20, 2012

வந்தது இன்றே ஈதுப் பெருநாள்! வாழ்த்தி மகிழ்வோம் வளமாய் இந்நாள்!

இல்லா தோர்க்குக் கொடுத் தளித்தும்
இருப்ப வர்கள் தானும் மகிழ்ந்தும்
வல்லோன் புகழைப் பாடித் துதிக்க
வந்தது இன்றே ஈதுப் பெருநாள்!
 
நல்லார் நயினார் முஹம்மதர் மேல்
நாளும் சொல்வோம் நன்மை ஸலவாத்
அல்லாஹ் அவன்துதி போற்றி உரைத்தே
வாழ்த்தி மகிழ்வோம் வளமாய் இந்நாள்!
 
பொல்லார் செய்யும் துன்பம் காத்தே
நல்லார் வழியில் சென்று தொடர்ந்தே
எல்லாம் ஒன்றாய்க் கூடி மகிழ்ந்தே
இருந்திடச் செய் எங்கள் ரப்பே!
 
வஸ்ஸலாம்.
 
துஆவுடன்,
தங்கள் துஆவை நாடும்,
அஹ்மது ஆரிஃப்
 

1 comment:

  1. >>>>>>
    பொல்லார் செய்யும் துன்பம் காத்தே
    நல்லார் வழியில் சென்று தொடர்ந்தே
    எல்லாம் ஒன்றாய்க் கூடி மகிழ்ந்தே
    இருந்திடச் செய் எங்கள் ரப்பே!
    <<<<<<<

    அன்பிற்கினிய சகோ ஆரிப், அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

    அன்புடன் புகாரி

    ReplyDelete