இருபதாம் ஆண்டுப் பயணத்தை தொடங்கும்
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்
நவீன அரபி மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் எண்ணத்துடன், 1993 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் தொடங்கப் பெற்ற அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம், உலக வரலாற்றில் தனது இருபதாம் ஆண்டுப் பயணத்தை வெற்றியுடன் தொடர்கின்றது.
அரபு நாடுகளுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கு நவீன அரபி மொழி, அரபி தட்டச்சுப் பயிற்சினை அளித்துச் சான்றிதழ் அளிககத் தொடங்கிய முதல் நிறுவனம் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் ஆகும். 1995 முதல் அரபி கம்ப்யூட்டர் வகுப்புகளை அளிக்க ஆரம்பித்தது. இன்று வரை ஏறக்குறைய 2000க்கும் அதிகமான மாணவர்கள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருக்கும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், மன்பஉல் அன்வார், மிஸ்பாஹுல் ஹுதா, ரஹ்மானிய்யா, அரூஸிய்யா, மஹ்ளரா, ஜமாலிய்யா, இன்னும் பல அரபி மத்ரஸாக்களின் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தில் இணைந்து நவீன அரபு மொழி, அரபி கம்ப்யூட்டர், அரபு மொழி வணிகத் தொடர்பு, அரபி மொழி பெயர்ப்புப் பயிற்சிகளைக் கற்றுத் திறமையாளர்களாக வெளி வருகின்றனர்.
ஸஹாரன்பூர், லக்னோ, பீஹார், குஜராத், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள அரபி மத்ரஸாக்களில் இருந்து ஆலிம் பட்டம் பெற்று வந்த மாணவர்களும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தில் பயின்று வருகின்றனர். அனைத்து அரபுக் கல்லூரிகளில் இருந்தும் வெளியாகும் புதிய ஆலிம்கள் ஒன்று கூடும் சங்கமமாக அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் திகழ்வதில் பெருமை கொள்கின்றது.
ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் ஐரோப்பியர்களும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸில் இணைந்து அரபி மொழி கற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.
இங்குப் பயிலும் மாணவர்களில் பலர் அரபு நாடுகளில் பணியாற்றி வருக்கின்றனர்.
அரபி மொழி, அரபி கம்ப்யூட்டர் இன்னும் அரபி மொழி வணிகத் தொடர்பு, அரபி-ஆங்கில மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில், 3 மாதம், 2 மாதம், 1 மாதத்திற்குள் கற்கும் வண்ணம் எளிமையான, அதே நேரத்தில் திறமையான முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அரபியில் பல்கலைக்கழகப் பயிற்சிகளான அஃப்ளலுல் உலமா, எம்.ஏ, போன்ற பயிற்சிகளுக்கான ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.
இணையத்தின் மூலம் உலகில் எங்கிருந்தாலும் அரபி மொழியைக் கற்கும் வண்ணம் ஆன்லைன் அரபி மொழிப் பயிற்சிகளை அளிப்பதிலும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கின்றது.
அத்துடன், மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உயர் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை ஆலோசனைகளும் அளிக்கப்படுகின்றன.
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸின் இன்னொரு மகத்தான பணி அரபி-ஆங்கில மொழி பெயர்ப்புச் சோலை. இதன் கீழ் அரபு நாடுகளுக்குச் செல்வோருக்குத் தேவையான விசா, சான்றிதழ்கள், கடிதங்கள் ஆகியவற்றை மொழி பெயர்த்தல் ஆகியவை அடங்கும்.
இன்னும், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள், வணிகக் கடிதங்கள், பொருள்களைப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விவரகு குறிப்புப் புத்தகங்கள் ஆகியவற்றை அரபியில் மொழிபெயர்த்தல், அச்சிடுதல் போன்ற சேவைகளையும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனம் அளித்து வருகின்றது.
இவ்வாறு, கல்வி, தொழில் ஆகிய இரு துறைகளிலும் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ நிறுவனம் தனது பங்கைச் சிறப்பான முறையில் ஆற்றி வருகின்றது.
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் பணிகள் மூலம் பயன் பெற விரும்புவோர், விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கலாம்.
தொடர்பு முகவரி:
அ. அஹ்மது ஆரிஃப்
எம்.காம்., எம்.ஃபில்., அஃப்ளலுல் உலமா,
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்,
255, சிந்து தெரு, ஷேக் அப்துல்லாஹ் நகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை – 600087
தொலைபேசி-9884033731
மின்னஞ்சல்: info@arabicinstitute.in
இணையதளம்: www.arabicinstitute.in
Googletalk: arabicinstituteofcommerce@gmail.com
Yahoo Messenger: arabicinstitute@yahoo.com



No comments:
Post a Comment